Sunday, April 22, 2007

என் இனிய இனியா!! பாகம்- 1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதில் சொல்..

நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வாவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் வீரன்

நான்
ஒரு
விண்வெளி வீரனாய்
இருந்த்திருந்தால்
செவ்வாய்
கிரகத்தை
ஆராய்ந்த்திருப்பேன்..

அடியேன்
காதல் வீரன்
உன்
பாதச்சுவடுகளின்
நீள அகலங்களை
குறிப்பெடுத்துக்
கொண்டிருக்கிறேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் மனம் VS உன் புன்னகை


நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..

பாவம் அதற்கு
தெரியாது
போலும்..
உன்
ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும்
என்று!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் கிரகமே!!

இனியா!
வான்வெளி விஞ்ஞானிகள்
கண்ணில் சிக்கி
விடாதே..
ஒன்பதாவது கிரகம்
புளூட்டோவை
நீக்கி
விட்டார்களாம்..

என் குடும்பத்திலிருந்து
பிரித்து
சூரியக்குடும்பத்தில்
உன்னைச்சேர்க்க
போட்டி போடுக்கின்றன
உலக
நாடுகள்!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பு மழையுடன்,
அருண்..!

காதல் யுத்(youth)தம்..




என் இனியா..!

மூன்றாம்
உலக யுத்தம்
நடக்க வேண்டும்..
அதில்
நீயும் நானும்
மட்டும்
பிழைக்க வேண்டும்..
புதிதாய்
நாம்
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,

நான் ஒரு
காதல் ஹிட்லரடி

நீதான்
எந்தன் ஜெர்மனி!!!

அன்பு மழையுடன்,
அருண்..!

Saturday, April 21, 2007

இதயம் உடைப்பவள்..




அமெரிக்க
மாப்பிள்ளையோடு
அழகாய் வாழுகிறாய்
நீ !

அலைகளில்
உன் முகம் பார்த்து,
காற்றினில்
உன் சுவாசம் நுகர்ந்து,
என் கால்களுக்கு
பின்னால்
உன் நிழல் தேடி,
ரத்தம் தோய்ந்த
உன் நினைவுகளோடு,
கடலோரப்பாறை மீது
கவிதையோடு
காத்திருக்கிறேன்
நான்...

கனவிலாவது வா அன்பே..

Friday, April 20, 2007

முதல் தமிழ் வலைப்பதிவு!



தமிழ் வலைத்தள விரும்பிகளுக்கு வணக்கம்!


நான் அருண்.இரா, இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவன். முதல் வலைப்பதிவு,என்ன எழுதுவது,என்ன எழுதுவது என்று குழம்பிவிட்டு,


இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே இதனை எழுதுகிறேன்.


“தமிழுக்கு அமுதென்று பேர்!
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!”


என்று மொழிந்த புலவர் பாரதிதாசன் வாழ்ந்த புதுவையைச் சேர்ந்த ஒரு புதுச்சேரித்தமிழன் நான்!! “தமிழ்” என்று சொல்லும் போது தான் ஒரு அருமையான தகவல் நினைவுக்கு வருகிறது.


பிரபல இணையத்தேடுதல்தளமான கூகிள்(GOOGLE) வருடந்தோறும், அந்த ஆண்டிலேயே உலக மக்களால் அதிகம் தேடப்பட்ட பத்து சொற்களை வெளியிடுவது வழக்கம். போன வருடம் அந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது “tamil” என்னும் சொல், அதாவது நம்ம தமிழ் தாங்க!! (தொலைக்காட்சியில் கேட்ட தகவல்) உண்மையில் இந்தச்செய்தி , தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும், உலகத்தமிழார்வலர்களுக்கும், அத்தனைத் தமிழனுக்கும் பெருமை சேர்க்கிறது. அது மட்டுமா?? இணையப் பயனாளிகள்,தமிழர்கள் அறிவுத்தாகத்தைத் தணிப்பதற்க்காக “தமிழ் இணையப் பல்கலைக்கழகம்” (Tamil virtual university) ஒன்று இயங்கி வருகிறது.அலைகடலென இணையம் முழுவதும் திரண்டு ஓடிவருகிற தமிழ் வெள்ள்த்தில் நானும் ஒரு துளியாய், இன்று முதல் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!! -
அன்புடன், தமிழை
ஆழமாய் நேசிக்கும்,
அருண். இரா,
புதுச்சேரி.
நண்பர்களுக்கு, arunr.friend@gmail.com