Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, April 20, 2007

முதல் தமிழ் வலைப்பதிவு!



தமிழ் வலைத்தள விரும்பிகளுக்கு வணக்கம்!


நான் அருண்.இரா, இறுதி ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவன். முதல் வலைப்பதிவு,என்ன எழுதுவது,என்ன எழுதுவது என்று குழம்பிவிட்டு,


இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே இதனை எழுதுகிறேன்.


“தமிழுக்கு அமுதென்று பேர்!
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!”


என்று மொழிந்த புலவர் பாரதிதாசன் வாழ்ந்த புதுவையைச் சேர்ந்த ஒரு புதுச்சேரித்தமிழன் நான்!! “தமிழ்” என்று சொல்லும் போது தான் ஒரு அருமையான தகவல் நினைவுக்கு வருகிறது.


பிரபல இணையத்தேடுதல்தளமான கூகிள்(GOOGLE) வருடந்தோறும், அந்த ஆண்டிலேயே உலக மக்களால் அதிகம் தேடப்பட்ட பத்து சொற்களை வெளியிடுவது வழக்கம். போன வருடம் அந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது “tamil” என்னும் சொல், அதாவது நம்ம தமிழ் தாங்க!! (தொலைக்காட்சியில் கேட்ட தகவல்) உண்மையில் இந்தச்செய்தி , தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும், உலகத்தமிழார்வலர்களுக்கும், அத்தனைத் தமிழனுக்கும் பெருமை சேர்க்கிறது. அது மட்டுமா?? இணையப் பயனாளிகள்,தமிழர்கள் அறிவுத்தாகத்தைத் தணிப்பதற்க்காக “தமிழ் இணையப் பல்கலைக்கழகம்” (Tamil virtual university) ஒன்று இயங்கி வருகிறது.அலைகடலென இணையம் முழுவதும் திரண்டு ஓடிவருகிற தமிழ் வெள்ள்த்தில் நானும் ஒரு துளியாய், இன்று முதல் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!! -
அன்புடன், தமிழை
ஆழமாய் நேசிக்கும்,
அருண். இரா,
புதுச்சேரி.
நண்பர்களுக்கு, arunr.friend@gmail.com