Saturday, July 4, 2009

ஊமைத்தொலைபேசி..!


மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்
.ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைகுப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.

உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..

"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .

ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தப்படியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..

8 comments:

karthik said...

nice, interesting.

rajan said...

காதலிகள் என்றுமே தேவதைகளாகவே இருக்கின்றனர். கவிதை அருமை
நீங்கள் உபயோகபடுதிருக்கும் வார்த்தை பிரயோகங்கள் ச்சே வாய்ப்பே இல்லை,
உங்களை பார்த்து காதலிக்க கற்று கொள்கிறேன்.

அருண். இரா said...

@ rajan
மச்சி ..!!! மழைக்!!காதலன் !! பக்கம் வந்ததுக்கு மிக்க நன்றி !! தபு சங்கர் விசிறி யா நீங்களும் !! பலே பலே ..தேவதை கவிதை லேய டவுட் வந்துச்சி. சூப்பர் !!

அப்படியே இங்க வந்துட்டு போங்க (http://machaanblog.blogspot.com/) .சிறப்ப இருக்கும்

Veliyoorkaran said...

Beautiful.! :)

prince said...

உங்களை பார்த்து கடலை போட கற்று கொள்கிறேன்.

ஹி! ஹி! ஹீ !!

Priya said...

அப்பப்பா... காதல் சொட்டுகிறது ஒவ்வொரு வார்த்தையிலும்!

jathumaki said...

superb...

சூர்யா - மும்பை said...

எல்லா காதலிகளும் ( இருக்கும் வரை) தேவதைதான். ஆனால் அதை கவிதையாய் வடித்த விதம் உங்கள் கவிதைக்கு வெள்ளை சிறகுகள் சேர்த்து விட்டன.