Monday, July 13, 2009

நூறாவது பூ !வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு


ஏர்அம் புழகுட


தமிழுக்கு இத்தனை பூக்களுண்டு..

இனியா

எனக்கு நீ மட்டும்

தான் !!

Saturday, July 4, 2009

ஊமைத்தொலைபேசி..!


மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்
.ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைகுப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.

உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..

"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .

ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தப்படியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..

கடவுச்சொல் காதல்


இனியா..
இனி
இந்த கணிப்பொறியின்
கடவுச்சொல் ஆகவோ ..
இல்லை..
எனக்கான கடைக்குட்டி
மகளின் பெயர் ஆகவோ
இல்லை ..
கவிதைத்தூண்டுகோல் ஆகவோ
மட்டுமே பயன்படுவாள் ..
ஆனால் வாரத்தில் ஏழு நாட்கள்
மட்டுமே நினைவில் வருவாள்..!