Showing posts with label என் இனிய இனியா. Show all posts
Showing posts with label என் இனிய இனியா. Show all posts

Monday, July 13, 2009

நூறாவது பூ !



வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு


ஏர்அம் புழகுட


தமிழுக்கு இத்தனை பூக்களுண்டு..

இனியா

எனக்கு நீ மட்டும்

தான் !!

Saturday, July 4, 2009

ஊமைத்தொலைபேசி..!


மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்
.ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைகுப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.

உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..

"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .

ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தப்படியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..

கடவுச்சொல் காதல்


இனியா..
இனி
இந்த கணிப்பொறியின்
கடவுச்சொல் ஆகவோ ..
இல்லை..
எனக்கான கடைக்குட்டி
மகளின் பெயர் ஆகவோ
இல்லை ..
கவிதைத்தூண்டுகோல் ஆகவோ
மட்டுமே பயன்படுவாள் ..
ஆனால் வாரத்தில் ஏழு நாட்கள்
மட்டுமே நினைவில் வருவாள்..!

Friday, May 4, 2007

இந்தா... இதயம்!


போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு
அபராதம் விதித்தால்
என்னை
மன்னித்து விடு..
என் இதயத்தை
மாசுபடுத்தியதாக
உன் மீது
புகார் கொடுத்து விட்டேன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~





நீர் புகாத
கடிகாரம் போல்
காதல் புகாத
இதயம்,
விற்பனைக்குக்
கிடைத்தால்
சொல்..
வாங்கிக்கொள்கிறேன்..
பழைய இதயத்தை
முழுவதும்
ஆக்கிரமித்து விட்டாய்
நீ!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பு மழையுடன்,
அருண்..!

இதய நோய்..


ஊருக்குள்
சிக்கன்குனியா,
பறவைக்காய்ச்சலெல்லாம்
பறவையால் பரவி வருகிறதா
என்று
ஒரெ பீதி....
அது உண்மையா
என்று தெரியவில்லை..

ஆனால்
என் உடலுக்குள்
“காதல் காய்ச்சல்”
ஒரு தேவதையால்
தான்
பரவி வருகிறது..!



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



வேகமாய் வரும்
தும்மலை அடக்கினால்
இரத்தக்குழாய்
வெடித்து விடுமாம்..
என் மேல் வரும்
காதலை நீ அடக்கினால்,
எனக்கு
இதயமே
வெடித்து விடும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்பு மழையுடன்,

அருண்..!

Sunday, April 22, 2007

என் இனிய இனியா!! பாகம்- 1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதில் சொல்..

நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வாவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் வீரன்

நான்
ஒரு
விண்வெளி வீரனாய்
இருந்த்திருந்தால்
செவ்வாய்
கிரகத்தை
ஆராய்ந்த்திருப்பேன்..

அடியேன்
காதல் வீரன்
உன்
பாதச்சுவடுகளின்
நீள அகலங்களை
குறிப்பெடுத்துக்
கொண்டிருக்கிறேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் மனம் VS உன் புன்னகை


நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..

பாவம் அதற்கு
தெரியாது
போலும்..
உன்
ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும்
என்று!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் கிரகமே!!

இனியா!
வான்வெளி விஞ்ஞானிகள்
கண்ணில் சிக்கி
விடாதே..
ஒன்பதாவது கிரகம்
புளூட்டோவை
நீக்கி
விட்டார்களாம்..

என் குடும்பத்திலிருந்து
பிரித்து
சூரியக்குடும்பத்தில்
உன்னைச்சேர்க்க
போட்டி போடுக்கின்றன
உலக
நாடுகள்!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பு மழையுடன்,
அருண்..!